மின்னஞ்சல்: [email protected] | தொடர்புக்கு:+91 - 44 - 45020047
துறையின் செயல்பாடுகள்
துணிநூல் துறை
அரசாணை 112 , கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் காதி (C2) துறை, நாள்: 22.10.2021- ன்படி நவீன, துடிப்பான, ஒருங்கிணைந்த மற்றும் உலக தரம் வாய்ந்த தமிழ்நாட்டில் உள்ள துணிநூல் பிரிவை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 25.10.2021 முதல் துணிநூல் துறை என தனியாக ஆரம்பிக்கப்பட்டது. மேலும் இத்துறை தொழில்நுட்ப ஜவுளிகள், பின்னலாடை, ஆயத்த ஆடை, பதனிடும் பூங்காக்கள், திருப்பூரில் உள்ள 18 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், ஜவுளி பூங்காக்கள் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை தயாரித்தல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது. அதுமட்டுமின்றி ஆறு கூட்டுறவு நூற்பாலைகள், தமிழ்நாடு பஞ்சாலை கழகம் (TNTC) கோயம்புத்தூர், தமிழ்நாடு கூட்டுறவு நூற்பாலைகளின் இணையம் (TANSPIN) ஆகிய நிறுவனங்கள் துணிநூல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது.
இழை முதல் நாகரீக ஆடை உற்பத்தி வரையிலான மொத்த ஜவுளி மதிப்பு தொடருக்கு ஆதரவை வழங்குதல்.
மொத்த ஜவுளி மதிப்பு தொடர் முழுமைக்கும் சந்தையினை விரிவு படுத்துதல்.
தொழில் துறையை புதுமைப்படுத்தவும் விரிவுபடுத்தவும் சர்வதேச அளவில் போட்டித்தன்மையுடன் கூடிய தகுதியை ஊக்குவித்தல்.
மாநிலத்தின் ஜவுளி ஏற்றுமதியின் பங்கை பன்மடங்காக அதிகரித்தல்.
ஜவுளித் தொழிலின் அனைத்துத் துறைகளுக்கும் மூலப்பொருட்களை வழங்குதல் மற்றும் தரமான ஜவுளித் துணிகள் உற்பத்தியைப் பெருக்குதல் போன்ற வளர்ச்சி நடவடிக்கைகளை உறுதி செய்தல்.
தொழில்துறை வளர்ச்சிக்கான ஜவுளிக் கொள்கை மற்றும் உத்திகளை வகுத்து செயல்படுத்துதல்.
ஜவுளித் துறையில் அன்னிய முதலீடுகளுக்கு மாநிலத்தை விருப்பமான இடமாக மாற்றுதல்.
துறையானது தொழில்துறையின் தொழில்நுட்ப-பொருளாதார நிலையை கண்காணித்து, நவீனமயமாக்கல் மற்றும் மறுவாழ்வுக்கான தேவையான கொள்கை கட்டமைப்பை வழங்குகிறது.
ஜவுளி துறையான சென்டர் ஆப் எக்சல்லென்ஸ் ( CoE) மற்றும் அகாடமி உடன் இணைந்து ஆராய்ச்சி மேம்பாடு நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கிறது.
வடிவங்கள், வர்த்தக முத்திரைகள், தொழில்துறை வடிவமைப்புகள் மற்றும் பொருட்களின் புவியியல் குறியீடுகள் ஆகிய துறைகளில் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல்.
எங்கள் நோக்கம்
புதுமை, நிலைப்புத்தன்மை மற்றும் ஜவுளி மதிப்பு தொடரில் உள்ள அனைத்து தொழில்கள் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற சர்வதேச ஜவுளி மையமாக தமிழ்நாட்டை உருவாக்குதல்.
திறன்மிக்க தொழிலாளர்கள், பொருத்தமான நிலம், சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட ஏராளமான வளங்களை பயன்படுத்தி இழை முதல் நாகரிக உற்பத்தி ஆடை வரை (from fiber to fashion), ஜவுளி இயந்திரங்கள் மற்றும் அவற்றின் தொழில்கள் ஆகியவற்றில் நிலையான வளர்ச்சியை எட்டுதல்.
உள்நாட்டு ஜவுளி நுகர்வு மற்றும் ஏற்றுமதி ஜவுளிகளின் தரத்தை உயர்த்துதல்.
ஜவுளித்துறையில் அன்னிய முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக இம்மாநிலத்தை மாற்றுதல்.
எங்கள் இலக்கு
வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய பணியை நாங்கள் முன்வைத்துள்ளோம்
புதுமை மற்றும் வளர்ச்சி ஊக்குவிப்பு
ஜவுளி மதிப்பு தொழில் உள்ள அனைத்து தொழில்களிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் ஜவுளி துறையில் நிலையான வளர்ச்சியை அடைதல்.
சமூகங்களை மேம்படுத்துதல்:
திறன்மிக்க தொழிலாளர்கள், பொருத்தமான நிலம் மற்றும் சரக்குப் போக்குவரத்து வசதி உள்ளிட்ட ஏராளமான வளங்களைப் பயன்படுத்தி இழை முதல் நாகரீக ஆடை உற்பத்தி,( from fibre to fashion) ஜவுளி இயந்திரங்கள் உதிரி பாகங்கள், இவற்றுடன் ஜவுளி மதிப்பு தொடரில்( Textile value chain) உள்ள தொழிலகங்கள் ஆகியவற்றுள் வேலைவாய்ப்பை உருவாக்குதல்.
ஒத்துழைப்பை வளர்த்தல்
ஆடை வடிவமைப்பாளர்கள் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய வணிக முத்திரையை பதித்தல்( Global Brands) போன்றவற்றை முறையான நிறுவன அமைப்புகளால் செயல்படுத்திட ஊக்குவித்தல்.
ஜவுளி உற்பத்தி மையம்
இத்துறையில் வெளிநாட்டினரின் முதலீடுகளுக்கான சிறந்த மற்றும் விருப்பமான இடமாக நமது மாநிலத்தை உருவாக்குதல். ஆடை அலங்கார நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்தி, மாறிவரும் நாகரிகத்திற்கு ஏற்ப ஜவுளி சுற்றுலாவிற்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.