மின்னஞ்சல்: [email protected] | தொடர்புக்கு:+91 - 44 - 45020047
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
ஜவுளி பதனிடும் துறையானது ஜவுளித் தொழிலில் வளம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிற்கும் ஒரு முக்கிய பங்களிப்பாகும். ஜவுளிப் பொருட்களுக்கு மதிப்பு கூட்டுவதில் பதனிடும் பிரிவின் பங்கு இன்றியமையாததாகும். ஜவுளித் தொழிலில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய சுற்றுச்சூழல் பாதிப்பு இன்றி ஜவுளி வணிகங்களுக்கான செழிப்பான மையமாக தமிழ்நாட்டினை மாற்றிட அரசு உத்தேசித்துள்ளது. திருப்பூரில் உள்ள 18 பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குள் (CETP) குவிந்துள்ள சுமார் 73,000 மெட்ரிக் டன் கலப்புக் கழிவு உப்புகளை அகற்றும் அரசின் முயற்சியானது சுற்றுச்சூழல் அக்கறையில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் அவசரப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அதன் முன்னோடி முயற்சிகளுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
சவால்கள்
கலப்பு கழிவு உப்புகளின் தேக்கம் கணிசமான சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அபாயங்களை ஏற்படுத்துகிறது. எனவே, "சுழற்சிப் பொருளாதாரம்" (Circular Economy) என்ற கொள்கைக்கிணங்க, "கழிவில் இருந்து செல்வம்" (Wealth from Waste) என்ற கருத்தாக்கத்தின்படி பயன்படுத்த முடியாத கலப்பு உப்புக்கழிவுகளை மதிப்புமிக்க துணைப் பொருட்களாக மாற்றுவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாக உள்ளது.
அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு
மேற்கண்ட பிரச்சனைகளைக் களைந்திட, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்களால் 2022-2023 ஆம் ஆண்டுக்கான துணிநூல் துறையின் மானியக் கோரிக்கையின் போது “தமிழ்நாட்டிலுள்ள ஜவுளிப் பதனிடும் தொழில் சார்ந்த பொதுக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிப்பு செய்த பின்னர் இருப்பாக உள்ள மீதமுள்ள கழிவு உப்புகளை சுற்றுச்சூழல் பாதிப்பின்றி அகற்றிடத் தேவையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் (Research and Development) ஊக்குவிக்கப்படும் " என அறிவிக்கப்பட்டது. இதற்கென விசாரணைகள், காட்சியுரை மற்றும் பொதுகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கலப்பு கழிவு உப்பு பிரச்சனைகளுக்கு மிகவும் பொருத்தமான தொழில்நுட்பத்தை கண்டறியும் நோக்கத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை எளிதாக்குதல் தொடர்பான செலவுகளை மேற்கொள்ளும் பொருட்டு அரசு வரவு செலவு திட்டத்தில் ரூ.25.00 லட்சத்தினை ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டம் மூன்று முக்கிய இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
Program Aims To Achieve Three Main Goals
தொடர் கழிவு உப்பு மேலாண்மை (Concurrent Reject Management System) மூலமாக மேலும் உப்புகள் குவிவதை தடுத்தல்.
Preventing Further Accumulation
ஏற்கனவே குவிந்துள்ள கழிவு உப்புகளை, பயன்படுத்தக்கூடிய துணைப்பொருட்களாக (Usable by- Products) மாற்றுதல்.
The threefold objectives of the Announcement are as detailed below
கழிவு நீர் சுத்திகரிப்பிற்கான செலவினைக் குறைத்திடும் வகையில், பொதுக் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்குத் தேவையான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை உருவாக்குதல் (SOPs).
அறிவியல் ஆராய்ச்சி குழு
பொதுக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் சேகரமாகும் (Accumulate) கழிவு உப்பு மற்றும் ஏற்கனவே குவிந்துள்ள அபாயகரமான கழிவு உப்புகளை அகற்றிட உரிய தொழில்நுட்பம் வழங்குநரை (Technology Provider) இறுதி செய்யும் பொருட்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சுற்றுச்சூழல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் மற்றும் இயக்குநர், டாக்டர். குரியன் ஜோசப் தலைமையில் தொழில்நுட்ப அங்கீகரிப்பு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
எதிர்கால கணிப்பு
இக்குழுவால் ஏழு கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கலப்பு கழிவு உப்புக்களை அகற்றுவதற்காக. பொருத்தமான தொழில்நுட்பத்தை இறுதி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், புதிய பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கும் தற்போது உள்ள பொதுக்கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் இயக்குதல் மற்றும் பராமரித்தல் செலவினங்களைக் குறைத்திடவும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை (SOP) இக்குழு பரிந்துரைக்கும். தமிழக அரசின் இந்த முயற்சியானது, நிலையான ஜவுளி செயலாக்கத்திற்கான ஒரு செயலூக்கமான அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. மேலும், கழிவுகளை செல்வமாக மாற்றுவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதோடு, சுழற்சி பொருளாதாரத்தை ஊக்குவித்து வளமான ஜவுளி சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.